செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கு சொந்தமான பிரபல நிறுவனத்தின் ரூ.239 கோடி சொத்துகள் முடக்கம்

Published On 2019-01-29 05:38 IST   |   Update On 2019-01-29 05:38:00 IST
சிட் பண்ட் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கு சொந்தமான நிறுவனத்தின் ரூ.239.29 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. #TMCLeader #PonziCase
புதுடெல்லி:

மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வந்த சாரதா சிட் பண்ட், சுமார் ரூ.1,900 கோடி ஊழலில் ஈடுபட்டது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முறைகேட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது.

இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான சிங் என்பவர் தலைவராக இருந்த பிரபல அல்கெமிஸ்ட் குரூப் நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனம் மீது நிதி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.239.29 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து சிங் எம்.பி. விலகியதாக கூறப்பட்டாலும், அவரது எம்.பி. பதவி தொடர்பான விவரங்களில் அல்கெமிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் தொடர்வதாகவே கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News