செய்திகள்

மகாராஷ்டிரத்தில் ஐஎஸ் ஆதரவாளர்கள் 9 பேர் கைது - குடியரசுதின விழாவை சீர்குலைக்க சதியா?

Published On 2019-01-23 09:09 GMT   |   Update On 2019-01-23 09:09 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 9 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ளார்களா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். #ISMilitants
மும்பை:

குடியரசு தின விழா நாடு முழுவதும் வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கலாம் என்று உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சல்மான்கான், பகத்ஷா, ஜாமன், மோஷின்கான், முகமது மசார் ஷேக், தகீதான், சர்ப்பிராஸ் அகமது, சாகீத்ஷேக் மற்றும் 17 வயது இளைஞர் (பெயர் வெளியிடப்படவில்லை.). ஆகிய 9 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

இந்த 9 பேரும் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ளார்களா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் குறித்து உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த 2 வாரங்களாக கண்காணித்து பிடித்தனர்.

மும்புரா, தானே, அவுரங்காபாத் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்த அவர்களை 12 குழுக்களாக பிரிந்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சிலீப்பர் செல்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #ISMilitants

Tags:    

Similar News