செய்திகள்

மோடியுடன் மோதல் எதிரொலி- நடிகர் சத்ருகன் சின்காவின் வி.ஐ.பி. அந்தஸ்து ரத்து

Published On 2019-01-06 13:28 GMT   |   Update On 2019-01-06 13:28 GMT
பிரதமர் மோடியுடன் சத்ருகன்சின்கா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் விமான நிலையங்களில் அவருக்கு வழங்கப்பட்ட வி.ஐ.பி. அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. #pmmodi #ShatrughanSinha

லக்னோ:

நடிகர் சத்ருகன் சின்கா பா.ஜனதா எம்.பி., ஆக இருக்கிறார். பீகாரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் முன்னாள் மத்திய மந்திரியாகவும் இருந்தார். இவர் பிரதமர் மோடியுடன் மோதல் போக்கை கடை பிடித்து வருகிறார்.

எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து வருவதால் இவர் பா.ஜனதா கட்சியின் அதிருப்தி எம்.பி.ஆக கருதப்படுகிறார். நாட்டில் உள்ள விமான நிலையங்களில் இவருக்கு வி.ஐ.பி. அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் பாட்னாவில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையம் சென்றார். அங்கு அவர் சென்ற கார் விமான ஓடுதளம் வரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இது குறித்து விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டது.

அதற்கு பதில் அளித்த ஆணையம் சத்ருகன் சின்காவின் வி.ஐ.பி. அந்தஸ்து 5 மாதங்களுக்கு முன்பே காலாவதி ஆகிவிட்டது. அவரது விண்ணப்பத்தை புதுப்பிப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.


பிரதமர் நரேந்திர மோடியுடன் சத்ருகன்சின்கா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் விமான நிலையங்களில் அவருக்கு வழங்கப்பட்ட வி.ஐ.பி. அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இருந்தாலும் இவர் விமான நிலைய ஆலோசனை கமிட்டியின் தலைவராக தொடர்ந்து நீடித்து வருகிறார். #pmmodi #ShatrughanSinha

Tags:    

Similar News