செய்திகள்

பெங்களூரில் பதுங்கியிருந்த சர்வதேச செம்மர கடத்தல்காரன் கைது

Published On 2018-12-23 17:37 IST   |   Update On 2018-12-23 17:37:00 IST
சர்வதேச செம்மரக் கடத்தல்காரனை போலீசார் கைது செய்து, அவனிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

திருமலை:

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட எஸ்.பி. அபிஷேக் மஹந்தி உத்தரவின் பேரில் செம்மரகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பெங்களூர் அருகே உள்ள கடிஹனஹள்ளி, ஒஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு சர்வதேச அளவில் செம்மர கடத்தலில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகளை குறிவைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது கடிஹனஹள்ளியில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த சர்வதேச செம்மர கடத்தல்காரன் நயாஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவனிடம் விசாரணை நடத்தியதில் அதே பகுதியில் உள்ள குடோனில் செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தி ரூ. 5 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News