செய்திகள்

காஷ்மீரில் கடுங்குளிரால் மக்கள் அவதி

Published On 2018-12-22 22:42 GMT   |   Update On 2018-12-22 22:42 GMT
காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுங்குளிர் வாட்டுகிறது. இந்த குளிரால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். #Kashmir
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடுங்குளிர் வாட்டுகிறது. இதனால் மாநிலத்தின் பல இடங்களில் மைனஸ் டிகிரிக்கு வெப்பநிலை சென்றுள்ளது.

லே பகுதியில் நேற்று முன்தினம் இரவு மைனஸ் 15.8 டிகிரியாக இருந்தது. இது முந்தைய நாள் இரவை விட 3.1 டிகிரி குறைவாகும். இதன் மூலம் நடப்பு குளிர்காலத்தின் அதிக குளிரான இரவாக அந்த இரவு பதிவாகி இருக்கிறது.

இதைப்போல மாநிலத்தின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் இரவு மைனஸ் 5.4 டிகிரியும், காசிகுண்ட் பகுதியில் மைனஸ் 4.9 டிகிரியும் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மாநிலத்தில் ஆண்டுதோறும் கடுங்குளிர் நிலவும் 40 நாள் காலமான ‘சில்லாய்-காலன்’ தொடங்கிய 2-வது நாளிலேயே காஷ்மீரின் பல பகுதிகளில் கடுங்குளிர் வாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த குளிரால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். #Kashmir 
Tags:    

Similar News