செய்திகள்

மிசோரம் மாநில முதல்வராக சோரம்தங்கா பதவியேற்றார்

Published On 2018-12-15 07:14 GMT   |   Update On 2018-12-15 07:14 GMT
மிசோரம் மாநில முதல்வராக மிசோ தேசிய முன்னணி தலைவர் சோரம்தங்கா இன்று பதவியேற்றார். #MizoNationalFront #Zoramthanga #MizoramCM
ஐசால்:

மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 40 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் பணிகளைத் தொடங்கியது.

முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காக கட்சியின் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் தலைநகர் ஐசாலில் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் சோரம்தங்கா, சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கவும் முடிவு செய்யப்பட்டது.



இதையடுத்து மாநில ஆளுநரைச் சந்தித்த சோரம்தங்கா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்ற ஆளுநர், ஆட்சியமைக்க வரும்படி சோரம்தங்காவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று மதியம் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சோரம்தங்கா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கும்மண்ணம் ராஜசேகரன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். #MizoNationalFront #Zoramthanga #MizoramCM
Tags:    

Similar News