செய்திகள்

திருப்பதி ரெயிலில் மும்பை தொழிலதிபரிடம் 3½ கிலோ தங்கம் கொள்ளை

Published On 2018-12-05 06:10 GMT   |   Update On 2018-12-05 06:10 GMT
திருப்பதி ரெயிலில் மும்பை தொழிலதிபரிடம் 3½ கிலோ தங்கம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldrobbery

திருப்பதி:

மும்பையை சேர்ந்தவர் ராஜி. இவர் மும்பையில் தயார் செய்யப்பட்ட நகைகளை பல மாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று ராஜி பெங்களூருக்கு சென்று அங்கு ஆர்டர் பெற்ற நகை கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்துவிட்டு, பின்னர் திருப்பதிக்கு ரெயிலில் சென்றார். அவர் ஒரு பையில் 3½ கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தார்.

ரெயில் ரேணிகுண்டா வந்தபோது ரெயிலில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த நகை பையை திருடிச் சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜி திருப்பதி ரெயில்வே டி.எஸ்.பி. ரமேஷ் பாபுவிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த ரெயில்வே இன்ஸ்பெக்டர் அசோக்குமார் அவருடன் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இவர் நகைகள் திருடு போனதாக நாடகமாடுகிறாரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldrobbery

Tags:    

Similar News