செய்திகள்

குஜராத் - போலீஸ் எழுத்து தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பாஜகவினர் உள்பட 4 பேர் கைது

Published On 2018-12-03 10:21 GMT   |   Update On 2018-12-03 10:21 GMT
குஜராத்தில் போலீஸ் எழுத்து தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடைய பாஜகவினர் உள்பட 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #GujaratConstableRecruitmentExam #PaperLeak
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 440 மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வை சுமார் 8.75 லட்சம் பேர் எழுதவிருந்தனர்.

ஆனால், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் போலீஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வினாத்தாள் வெளியானதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.



இந்நிலையில், வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடைய 2 பாஜகவினரையும், அவர்களுக்கு உதவிய மேலும் 2 பேரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பாஜகவை சேர்ந்த மன்ஹர் படேல், முகேஷ் சவுத்ரி மற்றும் அவர்களுக்கு உதவிய ரூபால் ஷர்மா, வி.பி.படேல் ஆகியோரை கைது செய்துள்ளோம். இதில் தலைமறைவாகி உள்ள முக்கிய குற்றவாளியான யஷ்பால் சோலங்கி குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர். #GujaratConstableRecruitmentExam #PaperLeak
Tags:    

Similar News