செய்திகள்

ராஜஸ்தான் தேர்தல்- கவர்ச்சிகர வாக்குறுதிகளுடன் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

Published On 2018-11-27 08:22 GMT   |   Update On 2018-11-27 08:22 GMT
ராஜஸ்தான் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது. அதில், பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. #RajastanPolls #BJPManifesto
ஜெய்ப்பூர்:

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. அதேசமயம் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தனது பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. ஆட்சியின் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, பிரகாஷ் ஜவடேகர், மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் வெளியிட்டனர். நிகழ்ச்சியில் கட்சியின் பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறையில் 30 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும், தகுதிவாய்ந்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் வசுந்தரா ராஜே பேசும்போது, 2013 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதாக குறிப்பிட்டார். #RajastanPolls #BJPManifesto
Tags:    

Similar News