செய்திகள்

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் ரூ. 4.80 லட்சம் கோடி இழப்பு- மேற்கு வங்க மந்திரி குற்றச்சாட்டு

Published On 2018-11-25 08:43 GMT   |   Update On 2018-11-25 08:43 GMT
பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி-யால் இந்தியாவின் ஜடிபி-யில் 4.80 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில மந்திரி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

மேற்கு வங்க மாநில நிதி மந்திரி அமித் மித்ரா புதுடெல்லியில் நடந்த இந்திய சர்வதேச ஏற்றுமதி கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு 59 நிமிடத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்படும் என்று கூறுவது மோசடியானது. இந்த திட்டத்தின் கீழ் இணைய தளம் மூலம் நாட்டில் எங்கிருந்தாவது ஒருவர் கடன் பெற்று இருக்கிறாரா? பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் இந்திய ஜிடிபி-யில் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கிறது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை மாநில அரசில் இழப்பு ரூ.78,929 கோடியாக உள்ளது.

இந்த இழப்பை மத்திய நேரடி வரிகள் விதிகளின் கீழ் மத்திய அரசு இழப்பீடாக அளிக்க வேண்டும். வளர்ந்த நாடுகளான ஜப்பான், சுவிட்சர்லாந்தை விட இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அதிகமாக உள்ளது.



பணமதிப்பிழப்பு, விவசாயிகள் மற்றும் முறைப்படுத்தப்படாத தொழில்களின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசு ஸ்திரமாக உள்ளதாக நம்ப சொல்கிறது. ஆனால் தவறான முடிவுகளையும், தோல்வி அளிக்கும் முடிவுகளையும் எடுக்கிறது. சிறுகுறு நிறுவனங்களின் மனதில் பொருளாதார தேக்கம் நிலவுகிறது என்ற மனநிலையை உருவாக்கி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News