செய்திகள்

மேம்பாலத்தில் தூங்கிய தொழிலாளர்கள் மீது கார் மோதியது - 5 பேர் பலி

Published On 2018-11-21 12:25 IST   |   Update On 2018-11-21 12:25:00 IST
அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் மேம்பாலத்தில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் ஏறியதில் 5 பேர் உயிரிழந்தனர். #HaryanaAccident
ஹிசார்:

அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இரவில் பாலத்தின் மீதுள்ள நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது அதிவேகமாக வந்த ஒரு கார், கட்டுப்பாட்டை இழந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. அத்துடன் எதிரே வந்த மற்றொரு கார் மீதும் மோதிவிட்டு பாலத்தில் இருந்து கவிழ்ந்தது.



அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். கார்  டிரைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #HaryanaAccident
Tags:    

Similar News