செய்திகள்

சத்தீஸ்கரில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் - 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2018-11-20 03:21 GMT   |   Update On 2018-11-20 03:21 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. #ChhattisgarhElections2018
ராய்ப்பூர்:

90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் சுமார் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

2-வது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு இன்று (20-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



வாக்குபதிவு நடைபெறும் 72 தொகுதிகளில் மொத்தம் 1,101 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 18 மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. இதில் நக்சலைட்டுகள் நிறைந்த மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜனதா தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. காங்கிரஸ் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் வேட்கையில் உள்ளது.

இதேபோல முன்னாள் முதல் மந்திரி அஜித் ஜோகி- மாயாவதி கூட்டணியும் களத்தில் இருக்கிறது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆனாலும் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. #ChhattisgarhElections2018

Tags:    

Similar News