செய்திகள்

உத்தரகாண்டில் சோகம் - பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலி

Published On 2018-11-18 18:31 IST   |   Update On 2018-11-18 18:31:00 IST
உத்தரகாண்டில் சாலை வளைவில் இருந்த பள்ளத்தாக்கில் தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். #BusAccident
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் உள்ள ஜான்கிசாட்டி பகுதியில் இருந்து விகாஸ் நகர் பகுதியை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

தம்டா பகுதியில் வந்தபோது, அருகில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.



தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். டேராடூனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
விபத்து குறித்து அறிந்த மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், மீட்புப் பணிகளை முடுக்கி விடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். #BusAccident
Tags:    

Similar News