செய்திகள்

செம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி தகவல்

Published On 2018-11-17 09:57 GMT   |   Update On 2018-11-17 09:57 GMT
செம்மரம் கடத்துபவர்களை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி சீனிவாசராவ் கூறியுள்ளார். #sandalwood #smuggling
திருப்பதி:

ஸ்ரீ காளஹஸ்தி, கொல்லப்பள்ளியில் நேற்று செம்மரம் கடத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி சீனிவாசராவ் கலந்து கொண்டு பேசியதாவது:-

செம்மர தடுப்புப்பிரிவு ஐ.ஜி.காந்தாராவ் அறிவுரையின்படி, பொதுமக்களிடம் செம்மரம் கடத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ராயலசீமா பகுதிகளிலும், சித்தூர் மாவட்டத்திலும் அரியவகை செம்மரங்கள் இருப்பதால் இவை மிகவும் விலை மதிப்புள்ளது. இவற்றை ஒரு சிலர் முறைகேடாக வெட்டுவதோடு மட்டுமல்லாது, கடத்தியும் வருகின்றனர்.

இதுபோன்று செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்கள் முதல் முறையாக பிடிபட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 லட்சம் அபராதமும், 2-வது முறை பிடிபட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதமும், 3-வது முறை பிடிபட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். செம்மரம் கடத்துபவர்களின் விவரங்களை தெரியப்படுத்துபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் செம்மர தடுப்பு பிரிவு ஊழியர்கள் சுப்பிரமணியம், சத்தியநாராயணா, பாபாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #sandalwood #smuggling
Tags:    

Similar News