செய்திகள்

ம.பி. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்

Published On 2018-11-05 15:45 IST   |   Update On 2018-11-05 15:45:00 IST
மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் புத்னி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #MPpolls #ShivrajSinghChauhan #Budhniconstituency
போபால்:

230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேர்தல் நடைபெறுகிறது.



இந்த தேர்தலில் போட்டியிடும்  177 வேட்பாளர்களின் முதல் பட்டியலை டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை கடந்த இரண்டாம் தேதி வெளியிட்டது. இன்று மேலும் 17 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் புத்னி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #MPpolls #ShivrajSinghChauhan #Budhniconstituency
Tags:    

Similar News