செய்திகள்

சீக்கியர்களுக்கு நீதி கேட்டு ஷிரோமணி அகாலி தளம் ஆர்ப்பாட்ட பேரணி

Published On 2018-11-03 06:55 GMT   |   Update On 2018-11-03 06:55 GMT
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு ஷிரோமணி அகாலி தளம் சார்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. #AntiSikhRiots #ShiromaniAkaliDalProtest #HarsimratKaurBadal
புதுடெல்லி:

இந்தியாவில் 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவரது பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிகாரப்பூர்வமாக 2800 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், சுமார் 8000 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் 34 ஆண்டு நிறைவையொட்டி, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு டெல்லியில் இன்று ஷிரோமணி அகாலி தளம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

இதில், ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என ஏராளமான சீக்கியர்கள் பங்கேற்றனர். 

இப்போராட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறுகையில், ‘எங்கள் சமுதாயம் 34 ஆண்டுகளாக நீதி கேட்டு போராடி வருகிறது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பலர் வீடுகளை இழந்தனர். இந்த கொடுமை இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளி ஆகும். யாருக்கும் நீதி கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தை நீதித்துறை ஏன் தாமாக முன்வந்து விசாரிக்கவில்லை?’ என ஆதங்கம் தெரிவித்தார். #AntiSikhRiots #ShiromaniAkaliDalProtest #HarsimratKaurBadal
Tags:    

Similar News