செய்திகள்
காளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் முன்பு யோகா பயிற்சியில் ஈடுபட்ட ஜப்பான் மாணவிகள்

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் வளாகத்தில் ஜப்பான் மாணவிகள் யோகா பயிற்சி

Published On 2018-10-30 07:54 GMT   |   Update On 2018-10-30 08:12 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜப்பான் மாணவிகள் ராஜகோபுரம் எதிரே ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்தனர். #KalahastiTemple #Yoga
ஸ்ரீகாளஹஸ்தி:

சென்னையைச் சேர்ந்த யோகா ஆசிரியரான பாஸ்கர் என்பவர் ஜப்பான் நாட்டில் உள்ளார். அவர், அங்கு யோகா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.

அவருடைய யோகா மையத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவிகளில் 50 பேர், 2 நாள் சுற்றுப் பயணமாக ஆந்திரா வந்தனர்.

அவர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்தனர். ஜப்பான் மாணவிகள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் அவர்கள் கோவில் வளாகத்தைச் சுற்றிப்பார்த்தனர். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள தூண்கள், மண்டபங்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை பார்த்து வியந்தனர். அந்தச் சிற்பங்கள் அழகிய வடிவில் அற்புதமாக உள்ளதாக ஜப்பான் மாணவிகள் கூறினர்.

அதைத்தொடர்ந்து ஜப்பான் மாணவிகள் சிவன் கோவிலின் ராஜகோபுரம் எதிரே ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்தனர். இதையடுத்து ராகு-கேது பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். அவர்களுக்கு கோவில் அதிகாரிகள் அனைத்து வசதி ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.  #KalahastiTemple #Yoga
Tags:    

Similar News