செய்திகள்

இந்திய விளையாட்டுத்துறையின் அவலம் - சாலையில் ஐஸ்கிரீம் விற்கும் தேசிய குத்துச்சண்டை வீரர்

Published On 2018-10-28 18:55 GMT   |   Update On 2018-10-29 04:31 GMT
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய குத்துச்சண்டை வீரரான தினேஷ் குமார், குடும்ப சூழ்நிலை காரணமாக தற்போது ஐஸ்கிரீம் விற்றுவருகிறார். #DineshKumar #ArjunaAward #Haryana
சண்டிகர்:

அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் குத்துச் சண்டை போட்டியில் தனது திறமையை கொண்டு தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர், இதுவரை 17 தங்கங்களும், ஒரு சில்வர் மற்றும் 5 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார்.

ஆனால், இன்று தனது தந்தை வாங்கிய கடனை அடைப்பதற்காக ஐஸ்கிரீம் விற்று பிழைத்து வருகிறார்.



இதுகுறித்து வீரர் தினேஷ் குமார் கூறுகையில், தற்போதைய மத்திய அரசோ அல்லது முந்தைய மத்திய அரசோ தமக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை எனவும், தற்போது அரசின் உதவியை நாடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர் தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக ஐஸ்கிரீம் விற்று வருவது, இந்தியாவில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #DineshKumar #ArjunaAward #Haryana
Tags:    

Similar News