செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சலைட்கள் தாக்குதல் - துணை ராணுவப் படை வீரர்கள் 4 பேர் பலி

Published On 2018-10-27 13:39 GMT   |   Update On 2018-10-27 13:39 GMT
சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 4 பேர் வீர மரணம் அடைந்தனர். #FourCRPFpersonnel #Naxalsblowup #ChhattisgarhNaxals
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு இருகட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நவம்பர் 12-ம் தேதியும், வடக்கு பகுதிகளில் நவம்பர் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல்கட்ட தேர்தலை சந்திக்கவுள்ள தொகுதிகளில் முதல் மந்திரி ரமன் சிங் இன்று பிரசாரத்தை தொடங்கி வைத்தார். 

இந்நிலையில், தெற்கு பகுதியில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் அவாப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற ரோந்து வாகனத்தின்மீது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தினர்.

முர்டான்டா முகாம் அருகே இன்று மாலை 4 மணியளவில் நடந்த இந்த கண்ணிவெடி தாக்குதலில்  மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர் மற்றும் இரு காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். #FourCRPFpersonnel #Naxalsblowup #ChhattisgarhNaxals
Tags:    

Similar News