செய்திகள்

ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

Published On 2018-10-22 09:40 GMT   |   Update On 2018-10-22 09:40 GMT
ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்க இயலாது என்று மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. #SupremeCourt
புதுடெல்லி:

ஆண்களுக்கான திருமண வயது 21 ஆக இருக்கிறது. இந்த திருமண வயதை 18 ஆக குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அசோக்பாண்டே என்ற வக்கீல் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்ணுக்கு திருமண வயது 18 என்றும் தற்போது சட்டம் உள்ளது. இருபாலருக்கும் திருமண வயதில் இந்த வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக காரணம் எதுவும் இல்லை.

18 வயது நிரம்பிய ஆண் வாக்களிக்கவும், ராணுவத்தில் சேரவும் அனுமதி அளிக்கும் போது திருமணம் செய்ய ஏன்? அனுமதிக்ககூடாது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.பவுல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்க இயலாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.



மேலும் பொதுநலனுக்கு உகந்த வழக்கு இது அல்ல என்று கூறி மனுவை தாக்கல் செய்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SupremeCourt
Tags:    

Similar News