செய்திகள்

சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை ஏற்க முடியாது - மோகன்பகவத்

Published On 2018-10-20 03:07 GMT   |   Update On 2018-10-20 03:07 GMT
சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை ஏற்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறி உள்ளார். #Sabarimala #SCVerdict #MohanBhagwat
நாக்பூர்:

மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் தசரா விழா நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசியதாவது:-

சபரிமலை பற்றிய சுப்ரீம்கோர்ட்டு கூறிய தீர்ப்பை இயற்கையாகவே ஏற்றுக் கொள்ள முடியாது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வை கோர்ட்டு தனது தீர்ப்பில் கவனத்தில் கொள்ளவில்லை. பாரம்பரியத்தை கடைபிடிக்கும் ஏராளமான பெண்களின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்து சமுதாயத்தின் மீது மட்டும் ஏன் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை. சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி உள்ளது. சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  #Sabarimala #SCVerdict #MohanBhagwat

Tags:    

Similar News