செய்திகள்

சபரிமலை தீர்ப்பு சமூகத்தின் பிரிவினைக்கு வழிவகுத்துள்ளது - ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு

Published On 2018-10-18 13:39 GMT   |   Update On 2018-10-18 13:39 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சபரிமலை தீர்ப்பு அமைதியின்மைக்கும், சமுதாயத்தில் பிளவுக்கும் வழிவகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். #Sabarimala #SabarimalaVerdict #RSS #MohanBhagwat
மும்பை:

மகாராஷ்டிராவின் நாக்பூரில் இந்த ஆண்டு விஜய தசமி விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு  பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அரசாங்கம்  மாற்றியமைந்தாலும் எல்லைகள் மீதான தாக்குதலை அண்டை நாடுகள் நிறுத்தவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பானது இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை எனவும், சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுவழி மற்றும் முற்றுமுழுதான சமுதாய பிரிவினையை  ஏற்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு என தனி சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ் பல கோடி மக்களின் உணர்வை உள்ளடக்கியதாகவும், ராமரின் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #Sabarimala #SabarimalaVerdict #RSS #MohanBhagwat
Tags:    

Similar News