செய்திகள்

மத்திய பிரதேசத்தில் சரக்கு லாரி மோதியதில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது

Published On 2018-10-18 10:17 IST   |   Update On 2018-10-18 10:17:00 IST
மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது லெவல் கிராசிங்கில் சரக்கு லாரி மோதியதில் ரெயில் தடம்புரண்டது. #TrainDerailed #TrivandrumRajdhani
போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தில் கோத்ரா-ரத்லம் இடையே உள்ள லெவல் கிராசிங் வழியாக இன்று காலை திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லெவல் கிராசிங்கின் கேட் மூடப்பட்டு, பிற வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  லெவல் கிராசிங் கேட்டை உடைத்து ரெயில் மீது பலமாக மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. லாரியின் முன்பகுதியும் நொறுங்கியது. லாரி டிரைவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.



தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அந்த வழிப்பாதையில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #TrainDerailed #TrivandrumRajdhani
Tags:    

Similar News