செய்திகள்
மத்தியப்பிரதேசம் - வணிக வளாகத்தில் திடீர் தீவிபத்து
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர். #FireinMall
போபால்:
மத்தியப்பிரதேசம் மாநிலம் பர்ஹான்புர் பகுதியில் அமைந்துள்ளது பகிசா வணிக வளாகம். நேற்று இரவு அந்த வணிக வளாகத்தில் பலர் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. அந்த தீ மளமளவென பரவியது. இந்த தீவிபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு 7க்கும் மேற்பட்ட தீயணைப்பு படைவீரர்கள் சென்றனர். அவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை போராடி அணைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ம.பி.யில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சற்று பரபரப்பு ஏற்பட்டது #FireinMall