செய்திகள்

இன்றும் விலை ஏற்றம் - பெட்ரோல் 22 காசுகளும், டீசல் 31 காசுகளும் உயர்வு

Published On 2018-10-08 02:09 GMT   |   Update On 2018-10-08 02:09 GMT
சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.26-க்கும், டீசல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 78.04-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #FuelPriceHike #PetrolDieselPriceHike
சென்னை:

பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணை உற்பத்தி சற்று குறைந்ததாலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும், தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்த விலை உயர்வு ஏற்படுகிறது.

இதற்கிடையே, மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. 

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த தொடங்கியுள்ளன.



சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.85.04-க்கும், டீசல் ரூ.77.73-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும்  (திங்கட்கிழமை) பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அதன்படி, பெட்ரோல் விலையில் 22 காசுகள் உயர்ந்து, 85.26 ரூபாய்க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்ந்து 78.04 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். #FuelPriceHike #PetrolDieselPriceHike

Tags:    

Similar News