செய்திகள்

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சந்தா கோச்சார் ராஜினாமா

Published On 2018-10-04 09:08 GMT   |   Update On 2018-10-04 09:08 GMT
வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். #ICICI #ChandaKochhar
புதுடெல்லி :

வீடியோகான் நிறுவனத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் வழங்கியது. இதில், அந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் குடும்பம் பெரும் ஆதாயம் அடைந்திருப்பதாக இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.

வழங்கப்பட்ட கடனில் ரூ.2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டதால் இந்த முறைகேடு புகார் எழுந்தது. பின்னர், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனால், வங்கி தலைவா் சந்தா கோச்சார் மீது விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சில மதங்களுக்கு முன்பு சிபிஐ ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கியது.

இந்நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி பதவியை சந்தா கோச்சார் இன்று ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நிர்வாகம் சந்தீப் பக்‌ஷி என்பவரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #ICICI #ChandaKochhar
Tags:    

Similar News