செய்திகள்

வரலாறு காணாத வீழ்ச்சி - இந்திய ரூபாய் மதிப்பு ரூ.73.77 ஆக சரிந்தது

Published On 2018-10-04 08:33 GMT   |   Update On 2018-10-04 08:33 GMT
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வகையில் ரூ.73.77 ஆக சரிந்தது. #IndianRupee #Dollar
புதுடெல்லி:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டது.

கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணை விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது.

மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வரலாறு காணாத வகையில் ரூ.73.34 ஆக சரிந்தது. இன்று காலை நிலவரப்படி ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ73.77 ஆக வீழ்ச்சி ஏற்பட்டது.

நடப்பு கணக்கில் ஏற்பட்ட பற்றாக்குறையாலும், மூலதனம் வெளியேற்றத்தாலும் ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. #IndianRupee #Dollar
Tags:    

Similar News