செய்திகள்

உத்தரபிரதேசத்தில் என்ஜினீயரை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்

Published On 2018-09-29 08:33 GMT   |   Update On 2018-09-29 08:33 GMT
உத்தரபிரதேசத்தில் என்ஜினீயரை சுட்டுக் கொன்ற போலீஸ்கார் கைது செய்யப்பட்டார். #policemanarrest

லக்னோ:

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் விவேக் திவாரி (38). என்ஜினீ யரான இவர் மல்டி நே‌ஷனல் கம்பெனியில் அதிகாரியாக பணிபுரிந்தார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் தன்னுடன் பணிபுரிந்த ஒருவரை ஆடம்பர சொகுசு காரில் அழைத்து வந்தார். லக்னோவின் புற நகரான கோம்தி நகர் விரிவாக்கம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு ரோந்து சென்ற 2 போலீசார் அவரது காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் சுட்டார். அதில் விவேக் திவாரி மீது குண்டு பாய்ந்தது.

உடனே அவரை லக்னோவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் பிரசாந்த்குமார் மற்றும் உடன் இருந்த மற்றொரு போலீஸ் காரரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்தின் பேரில் காரை நிறுத்த சைகை காட்டிய போது நிற்காமல் சென்றனர். பின்னர் எங்களது மோட்டார்சைக்கிள் மீதும், எங்கள் மீதும் காரை ஏற்ற முயன்றனர்.

காரை விட்டு வெளியே வரும்படி கூறினோம். வர மறுத்து மீண்டும் காரை ஏற்ற முயன்றார். இதனால் கீழே விழுந்த நான் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டேன் என தெரிவித்தார். #policemanarrest

Tags:    

Similar News