செய்திகள்

ஆளும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரிக்கப்படும் - ரமேஷ் சென்னிதலா பேச்சு

Published On 2018-09-27 20:53 GMT   |   Update On 2018-09-27 20:53 GMT
மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறினார். #RameshChennithala
தொடுபுழா:

காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில், நாடாளுமன்ற தேர்தலுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடுபுழாவில் நடந்தது. இதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கேரள மாநில காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ஏ.கே.மணி, கேரள காங்கிரஸ் (மாணி) தலைவர் கே.எம்.மாணி, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் இடுக்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் கோழிமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரமேஷ் சென்னிதலா பேசும்போது, கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மாநிலத்தில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றிவிடலாம். அதேபோல் சமூக ஊடகங்களை நாம் சரிவர பயன்படுத்த வேண்டும். மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் போராட்டங்கள் அதிக அளவில் நடத்தப்படும்.

அதிகாரம், பண பலத்துடன் தேர்தலில் களமிறங்கும் பா.ஜனதாவையும், இடதுசாரி கூட்டணி கட்சியினரையும் நாம் தொண்டர்படை கொண்டு எதிர்த்து வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  #RameshChennithala
Tags:    

Similar News