செய்திகள்

சம்பள உயர்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

Published On 2018-09-19 13:58 GMT   |   Update On 2018-09-19 13:58 GMT
சமீபத்தில் சம்பள உயர்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் 100 பேரை பிரதமர் மோடி டெல்லியில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். #Modi #AnganwatiWorkers
புதுடெல்லி:

நாடு முழுவதும் 25 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளனர். தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பள்ளிகளில் பணியாற்றி வரும் இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இதற்கிடையே, அங்கன்வாடி பணியாளர்களுக்கு சம்பள உயர்வை நிதி மந்திரி அருண்ஜெட்லி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி அங்கன்வாடி பணியாளர்களின் மாதச் சம்பளம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. சிறிய அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.2,250-ல் இருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கப்பட்டது.



அங்கன்வாடிகளில் உதவியாளர்களாக வேலை பார்ப்போருக்கு மாதச் சம்பளம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,250 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த இருவித அங்கன்வாடிகளிலும் சிறப்பாக பணியாற்றுவோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.500 மற்றும் ரூ.250 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள சம்பள உயர்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்களில் சுமார் 100 பேர் இன்று டெல்லிக்கு வருகை தந்தனர். அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினர்.  #Modi #AnganwatiWorkers
Tags:    

Similar News