செய்திகள்
ரத்த கையொப்பமிட்டு பிரதமருக்கு கடிதம் - இந்து மகா சபை அனுப்பியது
எஸ்.சி மற்றும் எஸ்.சி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை திரும்பப் பெறக்கோரி இந்து மகா சபை ரத்தத்தில் கையொப்பமிட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.#HinduMahasabha #PMModi
புதுடெல்லி :
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (எஸ்.சி., எஸ்.டி. சட்டம்) உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் சில மாற்றங்களை செய்தது. குறிப்பாக இந்த சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டோரை, உடனடியாக கைது செய்யும் விதிமுறையை தடை செய்தது. இதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில், எஸ்.சி, எஸ்.டி, அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை திரும்பப் பெறக்கோரி இந்து மகா சபை ரத்தத்தில் கையொப்பமிட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக இந்து மகா சபை பொதுச்செயலாளர் பூஜா சகுன் பாண்டே கூறுகையில், ’வாக்கு வங்கி அரசியலுக்காகவே பிரதமர் மோடி தலைமையிலான அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நாட்டில் உள்ள ஜாதிகளுக்கு இடையே மோதல் அதிகரித்து சமூகத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே, வன்கொடுமை தடுப்புச் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் அல்லது நான் தற்கொலை செய்துகொள்ள பிரதமர் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பிரதமருக்கு இந்து மகா சபை அனுப்பிய கடிதத்தில் பூஜா சகுன் பாண்டே உள்பட 14 பேர் ரத்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#HinduMahasabha #PMModi