செய்திகள்

முதல் மந்திரி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளின் கருப்பு துப்பட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார்

Published On 2018-09-11 21:23 GMT   |   Update On 2018-09-11 21:23 GMT
மத்தியப்பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளின் கருப்பு துப்பட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்த்தால் பரபரப்பு ஏற்பட்டது. #ShivrajSinghChauhan #BlackScarves
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
அங்குள்ள பெடுல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் முல்டாய் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிதரகூட் கிராமோதயா விஷ்வ  வித்யாலயாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் கருப்பு துப்பாட்டாக்களை அணிந்திருந்ததை பார்த்த பெண் போலீசார், அவர்களிடம் இருந்த் துப்பட்டாக்களை நிகழ்ச்சி முடிந்ததும் தருவதாக கூறி வாங்கி வைத்துள்ளனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.



முதல் மந்திரி பேசும்போது கருப்பு கொடியாக பயன்படுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் போலீசார் துப்பாட்டாக்களை வாங்கி வைத்துள்ளனர் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

முதல் மந்திரி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளின் துப்பட்டாக்களை போலீசார் வாங்கி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #ShivrajSinghChauhan #BlackScarves
Tags:    

Similar News