செய்திகள்

பாரத் பந்த்தில் பெட்ரோல் பங்க் உடைப்பு - கலவரம் ஏற்படாமல் பாதுகாக்க போலீசார் குவிப்பு

Published On 2018-09-10 06:40 GMT   |   Update On 2018-09-10 06:40 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்படும் போராட்டத்தில் பெட்ரோல் பங்க் உடைக்கப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #BharathBandh #PetrolDieselPriceHike
போபால்:

இந்தியாவில் நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைமையில் நாடு தழுவிய போராட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் அல்லாத, ஏறத்தாழ அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன.

நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கல்வீச்சு, பஸ் உடைப்பு போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும், அத்துமீறி சாலை மறியலில் ஈடுபடும் போராட்டக்காரர்களை போலீசாரும் கைது செய்து வருகின்றனர்.



மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கை போராட்டக்காரர்கள் சிலர் உடைத்துள்ளனர். அதேபோல், மும்பை பரேல் பகுதியில் நவ்நிர்மன் சேனா கட்சி தொண்டர்கள், கட்டாயப்படுத்தி கடைகளை மூடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பீகார் மாநிலத்தில் வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. பாட்னா, மும்பை போன்ற பகுதிகளில் சாலை மறியல் மற்றும் ரெயில் மறியலில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும், போராட்டங்கள் வன்முறையாகாத வண்ணம் போலீசார் பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டு வருகின்றனர். #BharathBandh #PetrolDieselPriceHike
Tags:    

Similar News