செய்திகள்

உலகின் மிகவும் உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை - அக்டோபர் 31-ம் தேதி மோடி திறக்கிறார்

Published On 2018-09-09 10:53 GMT   |   Update On 2018-09-09 10:53 GMT
குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். #SardarPatelstatue
அகமதாபாத்:

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் பிரிந்து கிடந்த 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை நிர்மாணித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்பு அவருக்கு உண்டு.

குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக நரேந்திர மோடி பதவிவகித்த போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு சிலையை உருவாக்க கடந்த 2013-ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.


2,603 கோடி ரூபாய் செலவில் இந்தச் சிலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா குஜராத் மாநில அந்நாள் முதல் மந்திரி நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த சிலையை அமைப்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மண், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

ஒருமைப்பாட்டுச் சிலை என பெயரிடப்பட்டுள்ள வல்லபாய் பட்டேலின் இந்தச் சிலையை அமைக்கும் பணிகள் சுமார் ஐந்தாண்டுகளில் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி திறந்து வைப்பார் என குஜராத் மாநில முதல் மந்திரி விஜய் ருபானி இன்று தெரிவித்துள்ளார். #SardarPatel statue #SardarPatelstatue
Tags:    

Similar News