செய்திகள்

மேற்கு வங்காளத்தில் மேலும் ஒரு பாலம் உடைந்து விழுந்து விபத்து

Published On 2018-09-07 06:11 GMT   |   Update On 2018-09-07 06:11 GMT
மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் மேலும் ஒரு பாலம் இன்று உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KolkataBridgeCollapse
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் மேஜர்ஹட் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மேம்பாலத்துக்கு கீழே சென்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இடிந்து விழுந்த மேஜர்ஹட் மேம்பாலத்தை முதல் மந்திரி மம்தா பானர்ஜி பார்வையிட்டார். விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரின் பன்சிடேவா பகுதியில் மேலும் ஒரு பாலம் இன்று உடைந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். போக்குவரத்து பெரிதும்
பாதிக்கப்பட்டது.

இரு தினங்களுக்கு முன் மேஜர்ஹட் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், இன்று மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #KolkataBridgeCollapse
Tags:    

Similar News