செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் விவகாரம் - தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு பசுமை தீர்ப்பாயம் கட்டுப்பாடு

Published On 2018-09-04 23:24 GMT   |   Update On 2018-09-04 23:24 GMT
மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள மொத்தம் 56 ஆயிரத்து 825 சதுர கி.மீ. நிலப்பரப்பை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. #NGT #WesternGhats
புதுடெல்லி:

மேற்கு தொடர்ச்சி மலையில், குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் உள்ள மொத்தம் 56 ஆயிரத்து 825 சதுர கி.மீ. நிலப்பரப்பை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான வரைவு அறிவிக்கையை மேற்கண்ட 6 மாநிலங்களுக்கும் அனுப்பி கருத்து கேட்டது. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவிக்கவில்லை.இதற்கிடையே, வரைவு அறிவிக்கை காலாவதி ஆனதால், மீண்டும் வெளியிட அனுமதி கேட்டு, பசுமை தீர்ப்பாயத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அணுகியது. அதை விசாரித்த நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு, ‘மாநிலங்களின் தாமதம், சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவாது’ என்று கண்டனம் தெரிவித்தது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த செயல்பாடுகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி தரக்கூடாது என்று தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. #NGT #WesternGhats
Tags:    

Similar News