செய்திகள்

இந்தியாவின் முதல் பயோ எரிபொருள் விமானத்தை பரிசோதனை செய்தது ஸ்பைஸ்ஜெட்

Published On 2018-08-27 13:56 IST   |   Update On 2018-08-27 13:56:00 IST
இந்தியாவின் முதல் பயோ எரிபொருள் மூலம் இயங்கும் விமானத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இன்று பரிசோதனை செய்தது. #SpiceJet #IndiasFirstBiojetFuelFlight
புதுடெல்லி:

விமான எரிபொருளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், செலவை குறைக்கும் வகையில் பயோ எரிபொருள் மூலம் விமானத்தை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி பாம்பர்டியர் க்யூ400 என்ற வகை விமானத்தை பயோஜெட் எரிபொருள் மூலம் இயக்கி இன்று பரிசோதனை செய்தது.

டேராடூனில் இருந்து டெல்லி வரை இந்த விமானம் இயக்கப்பட்டது. இதில், சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேர் பயணம் செய்தனர்.



இந்தியாவின் முதல் பயோ எரிபொருள் விமான சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘75 சதவீதம் ஏர் டர்பைன் எரிபொருள், 25 சதவீதம் பயோஜெட் எரிபொருள் கலந்து இந்த விமானம் இயக்கப்பட்டது. ஏர் டர்பைன் எரிபொருளுடன் ஒப்பிடுகையில் பயோஜெட் எரிபொருளை பயன்படுத்தும்போது கார்பன் உமிழ்வு குறைவாக இருக்கும்’ என்றும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. #SpiceJet #IndiasFirstBiojetFuelFlight

Tags:    

Similar News