செய்திகள்

சர்வாதிகாரத்துக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் - அமர்தியா சென்

Published On 2018-08-26 12:43 IST   |   Update On 2018-08-26 12:43:00 IST
இந்தியாவில் இருக்கும் சர்வாதிகாரத்துக்கு எதிராக அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என அமர்தியா சென் தெரிவித்துள்ளார். #AmartyaSen #BJP #LokSabhaPolls
கொல்கத்தா:

கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமர்தியா சென் இந்திய ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி இருப்பதாகவும், அதை மக்கள் தான் மீட்டெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும், மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக சாடிய அவர், 2014-ல் பாராளுமன்ற தேர்தலில் 33 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்ற பா.ஜ.க மோசமான நோக்கங்களுடன் ஆட்சி அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாம் அனைவரும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட வேண்டும் எனவும், மதவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நாம் ஒருபோதும் நிறுத்தி விடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருப்பதாகவும், அதனை மக்கள்தான் சரிசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #AmartyaSen #BJP #LokSabhaPolls
Tags:    

Similar News