செய்திகள்
இந்திய கடற்படைக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவில் 111 ஹெலிகாப்டர்கள்- பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
இந்திய கடற்படைக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 111 புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. #helicoptersprocurement #111Navyhelicopters
புதுடெல்லி:
நாட்டின் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்யும் குழுவின் கூட்டம் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய கடற்படைக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவில் 111 புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், 3,364 கோடி ரூபாய் செலவில் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் 24,879 கோடி ரூபாய்க்கு பிற ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தத்தில் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கொள்முதலுக்கு இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். #helicoptersprocurement #111Navyhelicopters