செய்திகள்

பஞ்சாப்பில் பரிதாபம் - சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலி

Published On 2018-08-19 18:54 IST   |   Update On 2018-08-19 18:54:00 IST
பஞ்சாப்பில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். #WallaCollapse
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் லக்கன்பூர் கிராமத்தில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்தது. இன்று காலை 15க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கட்டப்பட்ட சுவர் சரிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறினர்.

இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மேலும் 5 தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் பலியான் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News