செய்திகள்

கர்நாடகாவில் கொட்டி தீர்க்கும் கனமழை - ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்மந்திரி அறிவிப்பு

Published On 2018-08-16 15:57 GMT   |   Update On 2018-08-16 15:57 GMT
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaRains
பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதிகப்படியாக கொட்டி தீர்த்ததை அடுத்து, அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டு, மக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட தக்‌ஷினா கன்னடா, உடுப்பி, ஹஸன், ஷிமோகா, சிக்கமகலரு மற்றும் உத்தர கன்னடா உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண பகுதிகளுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக கர்நாடக மாநில முதல்மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaRains
Tags:    

Similar News