செய்திகள்

போலி தகவல்கள் மூலம் ஆதார் பெற்ற 4 ரோஹிங்கியா அகதிகள் கைது

Published On 2018-08-14 11:24 GMT   |   Update On 2018-08-14 11:24 GMT
போலி ஆவணங்கள் மூலம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பெற்ற பெண் உட்பட 4 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். #Rohingyas #Hyderabad
ஐதராபாத்:

மியான்மர் நாட்டின் உள்நாட்டு போர் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக ரோஹிங்கியா மக்கள் குடியேறினர். அவர்கள் அகதிகளாக மட்டுமே வாழ இயலுமே தவிர எந்த நாட்டிலும் குடிமக்களாக உரிமை பெற முடியாது.

இந்தியாவில் ஐதராபாத் நகரில் மட்டும் சுமார் 4 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர். அவர்களில் சில அகதிகள் குடியுரிமை போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார், பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளை அகதிகள் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஐதராபாத் நகரில் ஒரு பெண் உட்பட 4 ரோஹிங்கியா அகதிகள் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் வாழும் இருவரது உதவியுடன் இவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, போலி ஆவணங்களை பெற உதவியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களிடம் இருந்து ஆதார் போன்ற அடையாள அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தியுள்ளனர். #Rohingyas #Hyderabad
Tags:    

Similar News