செய்திகள்

வாராக்கடன்கள் உயர்ந்ததால் ரூ.4,876 கோடி இழப்பை சந்தித்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

Published On 2018-08-10 15:42 IST   |   Update On 2018-08-10 15:42:00 IST
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாராக்கடன்கள் உயர்வால் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 4,876 கோடி இழப்பை சந்தித்துள்ளது. #SBI #StateBankofIndia
புதுடெல்லி:

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடந்த நிதியாண்டின் முதல் (ஏப்ரல்-ஜூன்) காலாண்டில் 2006 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்றிருந்தது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் பெற்றிருந்த நிகர வருவாயான 62,911.08 கோடி ரூபாயைவிட இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த வங்கியின் மொத்த வருவாய்  65,492.67 கோடி ரூபாயாக உள்ளது.



எனினும், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 9.97 சதவீதமாக ( 1,88,068 கோடி ரூபாய்) இருந்த இயங்காத சொத்துகளின் நிகர மதிப்பு இந்த ஆண்டில் 10.69 சதவீதமாக (2,12,840 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.

அதேவேளையில், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 8,929.48 கோடி ரூபாயாக இருந்த மொத்த செலவினங்கள் இந்த ஆண்டில் இருமடங்கு அதிகமாகி  19,228 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இவற்றின் அடிப்படையில்,  கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 3,032  கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்த ஆண்டின் முதல் காலாண்டில்  4,230 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அவ்வங்கியின் வழக்கமான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #SBI #StateBankofIndia
Tags:    

Similar News