செய்திகள்

வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் மத்திய அரசின் கடிதம் இங்கிலாந்திடம் ஒப்படைப்பு

Published On 2018-08-05 01:26 GMT   |   Update On 2018-08-05 01:26 GMT
கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் மத்திய அரசின் கடிதம் இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டது. #NiravModi
புதுடெல்லி :

வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள. அவரை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு, இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையே பரஸ்பரம் குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பாக கடந்த 1993-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

இந்த கடிதத்தை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பிய மத்திய அரசு, அதை இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தூதரக அதிகாரிகளை அறிவுறுத்தியது. அதன்படி மத்திய அரசின் கடிதம் முறைப்படி இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News