செய்திகள்

மழைக்கு பலி எண்ணிக்கை 180 ஆக உயர்வு - வெள்ளம் பாதித்த பகுதிகளில் உ.பி. முதல்வர் ஆய்வு

Published On 2018-08-04 09:53 GMT   |   Update On 2018-08-04 09:53 GMT
உத்தரப்பிரதசம் மாநிலத்தில் ஒருமாதமாக பெய்த கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ள நிலையில் வெள்ள பாதிப்பை ஹெலிகாப்டர் மூலம் யோகி ஆதித்யாநாத் ஆய்வு செய்தார். #UPrains #YogiAdityanath
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பருவ மழை பெய்து வருகிறது.  கடந்த ஒருமாதமாக பெய்துவரும் கனமழை காரணமாக மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக, மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்பட பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடானது.



கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் இதுவரை சுமார் 180 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்துவரும் நிலையில் வெள்ள லக்கிம்பூர் கெரி, கோண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் சென்று முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆய்வு செய்து வருகிறார். #UPrains #YogiAdityanath #YogiAdityanathaerialsurvey #UPfloodaffectedareas

Tags:    

Similar News