செய்திகள்

உரிய ஆவணங்கள் இன்றி கர்நாடகாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பரமேஸ்வரா

Published On 2018-08-03 01:22 GMT   |   Update On 2018-08-03 01:22 GMT
கார்நாடக மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு அம்மாநிலத்தில் வசிக்கும் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளினால் பாராளுமன்றத்தில் கடந்த இரு தினங்களாக கடும் அமளி ஏற்பட்டது.

இந்நிலையில், கார்நாடக மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’ஆப்ரிக்காவை சேர்ந்த 123 பேர் உரிய ஆவணங்கள் இன்றி கர்நாடகாவில் தங்கியிருப்பதை மாநில போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆப்ரிக்காவை சேர்ந்தவர்களோ, வங்கதேசத்தை சேர்ந்தவர்களோ யாராக இருந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லை எனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News