செய்திகள்

14 வயது சிறுமியின் தொண்டையில் 9 ஊசிகள் - போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்

Published On 2018-08-01 11:29 GMT   |   Update On 2018-08-01 11:29 GMT
14 வயது சிறுமியின் தொண்டையில் உணவுக்குழாயை சுற்றி இருந்த 9 ஊசிகளை மருத்துவர்கள் மிக கவனமாக அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலம் கிரிஷ்னாகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடும் தொண்டை வலி காரணமாக கடந்த திங்கள் அன்று அங்குள்ள நில் ரதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாய்பேச முடியாமல் இருந்த அந்த சிறுமியின் தொண்டை பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தொண்டையில் உணவுக்குழாயை சுற்றிலும் 9 ஊசிகள் இருந்துள்ளன. இதனை அடுத்து, சுமார் 4 மணி நேரம் மிக கவனமாக அறுவை சிகிச்சை செய்து ஊசிகளை வெளியே எடுத்து சிறுமியை காப்பாற்றினர். எனினும், ஊசி எப்படி தொண்டைக்குள் சென்றது என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.

சிறுமியின் குடும்பத்தினர் இது தொடர்பாக எந்த தகவலும் கூற மறுக்கின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், விளையாட்டுத்தனமாக அந்த சிறுமி ஊசியை விழுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News