செய்திகள்

உத்தரப்பிரதேசம் - கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியது

Published On 2018-08-01 10:24 GMT   |   Update On 2018-08-01 10:24 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. #UPRain
லக்னோ:

பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்பட பல்வேறு நகரங்கள் பெய்த மழையால் வெள்ளக் காடானது.

வெள்ளத்தில் சிக்கிய வீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இதுவரை 80 பேர் பலியாகினர்.



இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 150க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 1100க்கு மேற்பட்ட வீடுகள் பெருத்த சேதம் அடைந்தன.

மழையில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும். சேதமடைந்த வீடுகளை சீரமைக்க தேவையான நிதியுதவி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. #UPRain
Tags:    

Similar News