செய்திகள்
சுனந்தா புஷ்கர் கொலைவழக்கு - சசிதரூர் வெளிநாடு செல்ல அனுமதித்து கோர்ட் உத்தரவு
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது கணவர் சசிதரூர் வெளிநாடு செல்வதற்கு டெல்லி பாட்டியாலா கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #ShashiTharoor #SunandaPushkar
புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரியான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் மர்மமான முறையில் விடுதி அறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சசிதரூர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட சசிதரூர் வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சசிதரூர் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தனர். பிணைத்தொகையாக ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். #ShashiTharoor #SunandaPushkar