செய்திகள்
சார்ஜ் செய்தவாறே செல்போனில் பேசிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
சார்ஜரில் இருந்து செல்போனை எடுக்காமல் செல்போனில் பேசிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
ஓங்கோல்:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வகுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஸ்தான் ரெட்டி (வயது 32). அவர் நேற்று தன்னுடைய வீட்டில் செல்போனுக்கு ‘சார்ஜ்’ ஏற்றினார்.
அப்போது அவருடைய செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதனால் அவர் ‘சார்ஜரில்’ இருந்து செல்போனை எடுக்காமல் அப்படியே பேசினார். செல்போனில் அதிக சூடு ஏறியதால் திடீரென அது வெடித்தது. அதே சமயம் மஸ்தான் ரெட்டி மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.